Home நாடு ஆர்.எஸ்.என்.ராயர், பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் வெற்றி!

ஆர்.எஸ்.என்.ராயர், பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் வெற்றி!

369
0
SHARE
Ad
ஆர்.எஸ்.என்.ராயர்

ஜோர்ஜ்டவுன் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் வெற்றி பெற்றார். மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக ராயர் தேர்வு பெற்றார்.

31 வேட்பாளர்கள் களமிறங்கிய பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் பல இந்தியர்கள் போட்டியிட்டாலும் இரண்டு இந்தியர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். அதிக வாக்குகளில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் வெற்றி பெற்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட 15 வேட்பாளர்களில் மற்றொரு இந்தியர் ராயர் மட்டுமே!

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரான ராயர் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

#TamilSchoolmychoice

போட்டியிட்டவர்களில் அதிக வாக்குகளில் ராம் கர்ப்பால் வெற்றி பெற, இரண்டாவது நிலையில் அதிக வாக்குகளைப் பெற்றவர் புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித வளத் துறை அமைச்சருமான ஸ்டீவன் சிம் ஆவார்.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஸ்டீவன் சிம் பினாங்கு மாநில ஜசெக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.