Home Featured கலையுலகம் மிகா விருது 2016: சிறந்த இசை, சிறந்த வரிகள் – சுந்தரா, கோகோநந்தா கூட்டணிக்கு விருது!

மிகா விருது 2016: சிறந்த இசை, சிறந்த வரிகள் – சுந்தரா, கோகோநந்தா கூட்டணிக்கு விருது!

740
0
SHARE
Ad

mica-muthukumar-wantedகோலாலம்பூர் – ‘ஆதாம் எனக்கெனவே ஏவாள் பிறந்தாளே’ என்ற அழகான பாடல் 2015-ம் ஆண்டில் வெளிவந்த ‘முத்துக்குமார் வாண்டட்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது.

சுந்தரா இசையில், கோகோ நந்தா பாடல்வரிகளில் நரேஸ் ஐயர் பாடிய இப்பாடல் கேட்பவரின் மனதை உருக்கும் வகையில் அமைந்திருந்தது.

இப்பாடல் மட்டுமல்லாது, அப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்துப் பாடல்களும் அதே போன்றதொரு தரத்தில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ‘முத்துக்குமார் வாண்டட்’ திரைப்படத்தின் இசைக்கும், வரிகளுக்கும், பாடகர்களுக்கும் சிறந்த அங்கீகாரம் வழங்கும் வகையில், வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ‘மிகா விருது 2016’ என்ற பிரம்மாண்ட விழாவில், சிறந்த இசையமைப்பாளர் விருது சுந்தராவுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது கோகோ நந்தாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதோடு, ‘முத்துக்குமார் வாண்டட்’ திரைப்படத்தில் பாடிய சிந்தி ஹாசினிக்கு சிறந்த பாடகிக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சுந்தரா, கோகோ நந்தா கூட்டணிக்கு செல்லியலின் மனமார்ந்த வாழ்த்துகள்!