Home Featured கலையுலகம் மிகா விருது 2016: சிறந்த நடிகை கவிதா தியாகராஜன்!

மிகா விருது 2016: சிறந்த நடிகை கவிதா தியாகராஜன்!

920
0
SHARE
Ad

mica-muthukumar-wantedகோலாலம்பூர் – வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ‘மிகா விருது 2016’ என்ற பிரம்மாண்ட விழாவில், ‘மறவன்’ திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக ‘சிறந்த நடிகைக்கான’ விருது கவிதா தியாகராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மறவன் திரைப்படத்தில் மல்லிகா கதாப்பாத்திரத்தில் கவிதா மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்திற்காக தனது தோற்றம், உடல்மொழி ஆகியவற்றை தோட்டத்துப் பெண் போன்று இருப்பதற்காக மிகவும் மெனக்கெட்டிருந்தது அவரது நடிப்பில் தெரிந்தது.

கதாநாயகனுக்கு இணையாக நடிப்பதற்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் மிக அருமையான கதாப்பாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது என்பதோடு, “ஏங்க மண்ணுல போடுற காசு தாய்க்கு சமமானது” போன்ற ஆழமான வசனங்களும் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

‘சிறந்த நடிகைக்கான’ விருது பெற்ற கவிதாவுக்கு செல்லியலின் வாழ்த்துகள்!