நியூயார்க் / தாக்கா, மெல்பர்ன் ஃபீனிக்ஸ் பிலிம் பெஸ்டிவலில், பார்சிலோனா, ரஷியா, சிங்கப்பூர் மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் ‘மறவன்’ இடம்பெற்று விருதுகளையும் வென்று மலெசியாவிற்குப் பெருமை சேர்த்தது.
இந்நிலையில், இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரன், மீண்டும் நடிகர் ஹரிதாசுடன் கூட்டணி அமைத்துப் புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.
அத்திரைப்படத்திற்கு ‘ஆசான்’ எனப் பெயரிட்டுள்ள புவனேந்திரன் அதன் முதல் பார்வை போஸ்டர் மற்றும் காட்சியை நேற்று புதன்கிழமை இரவு வெளியிட்டார்.
முதல்பார்வைக்கு தற்போது வரை மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகின்றது.
இதுவரை 21,000-த்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டிருக்கும் முதல் பார்வையைக் கீழ்காணும் இணைப்பின் வழியாகக் காணலாம்:
https://www.facebook.com/aasaanthemovie/videos/1916226195317068/