Home Video ‘இப்படை வெல்லும்’ – உதயநிதி ஸ்டாலின் படத்தில் ஹரிதாஸ்!

‘இப்படை வெல்லும்’ – உதயநிதி ஸ்டாலின் படத்தில் ஹரிதாஸ்!

1473
0
SHARE
Ad

Hari1கோலாலம்பூர் – ‘மறவன்’ திரைப்படத்தில் அன்பா கதாப்பாத்திரத்தில் நடித்து மலேசிய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் ஹரிதாஸ், உதயநிதி ஸ்டாலினுடன் ‘இப்படை வெல்லும்’ என்ற புதிய கோலிவுட் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும், இத்திரைப்படத்தில் மஞ்சிமா மோகன், ஆர்.கே.சுரேஸ், ராதிகா, ஸ்ரீமன், சூரி ஆகியோரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ குறுமுன்னோட்டம் நேற்று நடிகர் தனுஷால் வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

Haridhassஇத்திரைப்படத்தில், ஹரிதாஸ் ஏ.ரவிக்குமார் என்ற போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

அதுமட்டுமின்றி, தற்போது ‘மறவன்’ இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரனின் அடுத்தப் படைப்பான ‘ஆசான்’ திரைப்படத்திலும் ஹரிதாஸ் கணித மேதை கதாப்பாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.