Home நாடு வேதமூர்த்திக்கு எதிராக ஹிண்ட்ராப் போராளிகள் கண்டனம்!

வேதமூர்த்திக்கு எதிராக ஹிண்ட்ராப் போராளிகள் கண்டனம்!

1025
0
SHARE
Ad

waythamoorthy-hindraf-கோலாலம்பூர் – ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தியுடன் எந்த ஒரு கூட்டணியும் வைக்க வேண்டாம் என்றும், அவரை நிராகரிக்கும் படியும் ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த ஒரு தரப்பு இன்று பக்காத்தான் ஹராப்பானைக் கேட்டுக் கொண்டது.

மலேசிய இந்திய மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்ட வேதமூர்த்தி இன்னும் தனக்கு அம்மக்களிடம் ஆதரவு இருப்பதாக ஹராப்பானிடம் கூறி வருவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து கோலாலம்பூர் சீன மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அத்தரப்பினரின் சார்பில் பேசிய எஸ். ஜெயதாஸ், விரைவில் இது குறித்து ஹராப்பான் தலைவர்களுடன் தாங்கள் பேசுவதற்குத் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice