Home Featured கலையுலகம் மிகா விருது 2016: சிறந்த நடிகர் குமரேஸ்!

மிகா விருது 2016: சிறந்த நடிகர் குமரேஸ்!

761
0
SHARE
Ad

mica-muthukumar-wantedகோலாலம்பூர் – வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ‘மிகா விருது 2016’ என்ற பிரம்மாண்ட விழாவில், ‘மறவன்’ திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக குமரேசுக்கு ‘சிறந்த நடிகருக்கான’ விருது வழங்கப்பட்டது.

அஸ்ட்ரோ புகழ் அறிவிப்பாளர் குமரேசன்.. ‘மறவன்’ திரைப்படத்தில் தோட்டத்தொழிலாளியாக நடித்திருந்தார்.

“அத்தனை உழைப்பையும் மண்ணுல போட்டுட்டு என்னால வானத்தைப் பாத்துக்கிட்டு இருக்க முடியாது” என்று அப்பாவியாகப் பேசுவதாகட்டும், “சார்.. விட்டுருங்க சார்.. என்னால இதெல்லாம் பார்க்க முடியாது சார்” என்று கதறும் காட்சியிலும் அவ்வளவு தத்ரூபமான நடிப்பை வழங்கியிருந்தார் குமரேஸ்.

#TamilSchoolmychoice

காரைப் பரிசாகப் பெற்றுவிட்டு, வசனமே இல்லாமல் ஒரு சில நொடிகள், குமரேசன் காட்டும் முகபாவனைகள் அழகு. அதற்கு இன்னும் பல விருதுகள் வழங்கலாம்.

சிறந்த நடிகர் விருது பெற்ற குமரேசுக்கு செல்லியலின் வாழ்த்துகள்!