Home Featured கலையுலகம் மிகா விருது 2016: சிறந்த வில்லன் நடிகராக ஹரிதாஸ் தேர்வு!

மிகா விருது 2016: சிறந்த வில்லன் நடிகராக ஹரிதாஸ் தேர்வு!

773
0
SHARE
Ad

mica-hariகோலாலம்பூர் – ‘மேல பறக்கணும்னா சூடு தாங்கனும் டா’ இந்த வசனத்தை மலேசிய சினிமா ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

‘மறவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்தை, தனது அசாத்தியமான நடிப்பாலும், உச்சரிப்பாலும், மிக அழகாக மாற்றினார் நடிகர் ஹரிதாஸ்.

நல்லவன் பாதி, தீயவன் பாதி என்பது போல், இன்பா கதாப்பாத்திரத்தில் மாறி மாறி நடிப்பை வழங்கி, தமிழக நடிகர்களே வியக்கும் அளவிற்கு தனது நடிப்புத் திறமையை உலகம் அறிய நிரூபித்தார்.

#TamilSchoolmychoice

‘மறவன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக உலக அளவில் அவருக்கு அங்கீகாரம் கிடைத்து வந்த நிலையில், தனது சொந்த தேசத்தில், சொந்த ரசிகர்களின் வாக்களிப்பில், மிகா 2016 விருது மூலம் ‘சிறந்த வில்லன்’ நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நடிகர் ஹரிதாஸ்.

நடிகர் ஹரிதாசுக்கு செல்லியலின் வாழ்த்துகள்!