Home Featured நாடு மூவார் பேருந்து விபத்து: 13 பேர் மரணம் – 17 பேர் காயம்!

மூவார் பேருந்து விபத்து: 13 பேர் மரணம் – 17 பேர் காயம்!

756
0
SHARE
Ad

மூவார் – கிறிஸ்மஸ் பெருநாளை முன்னிட்டு இலட்சக்கணக்கான மலேசியர்கள் நீண்ட விடுமுறையைக் கழிக்க பல இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் மூவார் அருகே விரைவு பேருந்து ஒன்று மலை முகட்டிலிருந்து விழுந்ததில் அந்த பேருந்தின் ஓட்டுநர் உட்பட 13 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த சோக சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

muar-bus-accidentவிழுந்து நொறுங்கிய பேருந்திலிருந்து பயணிகளை மீட்கும் பணி நடைபெறுகின்றது (படம்: நன்றி – அஸ்ட்ரோ அவானி)

#TamilSchoolmychoice

மூவாருக்கு அருகே 6 மீட்டருக்குக்கும் அதிகமான உயரம் கொண்ட ஒரு மலை முகட்டிலிருந்து சாலையிலிருந்து விலகி இந்த பேருந்து விழுந்தது.

கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாரு நோக்கி அந்த பேருந்து சென்று கொண்டிருந்தபோது கம்போங் ஜாயோ என்ற இடத்தில் (பாகோ வட்டாரம்) ஜாலான் கங்கார்-செனாங்கா சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

தீயணைப்புப் படையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.