Home உலகம் பாகிஸ்தானில் அணுஆயுத ஏவுகணை சோதனை

பாகிஸ்தானில் அணுஆயுத ஏவுகணை சோதனை

534
0
SHARE
Ad

anu-kundu

ராவல்பிண்டி, பிப். 16-பாகிஸ்தான் இன்று குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஹாட்ப்-2(அப்டலி) என்ற ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.பி.ஆர் என்கிற ராணுவ செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஹாட்ப்-2(அப்டலி) என்கிற இந்த ஏவுகணை 180 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை அணு ஆயுதத்தையும் மற்ற வழக்கமான ஆயுதங்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்டதாகும்.

இது கடல் அல்லது நிலத்திலிருக்கும் இலக்கை துல்லியமாகத் தாக்கக்கூடியது. இதனை நிலம் அல்லது கடலில் இருந்து ஏவலாம்.

இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து, விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரியும், பிரதமர் ராஜா பர்வேஸ் அஸ்ரபும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த ஏவுகணை பாகிஸ்தானின் ராணுவத்தின் செயல்திறனை அதிகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.