Home இந்தி டெல்லி கோடீஸ்வரர் வீட்டு ஆடம்பர திருமணத்தில் ஓரிரவு நடனமாட ரூ. 3 1/2 கோடி வாங்கிய...

டெல்லி கோடீஸ்வரர் வீட்டு ஆடம்பர திருமணத்தில் ஓரிரவு நடனமாட ரூ. 3 1/2 கோடி வாங்கிய சல்மான் கான்

680
0
SHARE
Ad

salmanபுதுடெல்லி, பிப். 16- டெல்லியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் வீட்டு திருமணம் நேற்று முன்தினம் புதுடெல்லியில் வெகு ஆடம்பரமாக நடைபெற்றது.

பாலிவுட் பிரபலங்களின் திருமண ஆடம்பரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பணம் தண்ணீராக பாய்ந்ததாக திருமணத்தில் பங்கேற்றவர்கள் வியப்புடன் கூறுகின்றனர்.

திருமண அரங்கில் சூதாட்டம், குத்தாட்டம் என அத்தனை பொழுதுப்போக்கு அம்சங்களும் படு அமர்க்களமாக களை கட்டியிருந்தன. சூதாட்டத்தில் வென்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு ஆடம்பர கார்களும், லண்டன் சென்றுவர விமான டிக்கெட்டுகளும் பரிசாக வழங்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த திருமணத்தில் ஓரிரவு பங்கேற்று நடனமாடுவதற்கு இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ரூ. 3 1/2 கோடி வழங்கப்பட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.