வாஷிங்டன், மே 30 – மேற்கு சீன கடற்கரையோரம் உள்ள பன்னாட்டு வான்வெளியில் சீனா தனது தந்திரமான நடவடிக்கைகள் மூலம் அதன் பாதுகாப்பு விமானங்களை அங்கு அனுப்பி அண்டை நாடுகளுக்கு பதட்டத்தை உருவாக்கி வருகின்றது என ஜப்பான் அரசு குற்றஞ்சாட்டியது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான ஜென் ப்சாகி கூறுகையில், “சர்ச்சை எழுந்துள்ள பகுதி, சீனாவின் விமானப் பாதுகாப்பு அடையாள மண்டலம் என்பதற்கு அமெரிக்கா எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை. எனவே பன்னாட்டு வான்வெளியில் அத்துமீறி நுழைந்து குறுக்கீடு செய்வது வட்டாரத்தில் பதட்டத்தை உருவாக்கி வருவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிய நாடுகளில் சீனா தனது ஆதிக்கத்தை தொடர நினைப்பது. சமீப நாட்களில் வெட்ட வெளிச்சமாகி வருகின்றது. தென் சீனக் கடல் பகுதிகளில் வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் கடல் எல்லைகளிலும் தனது அத்துமீறலை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.