பாகிஸ்தானில் கிலானி பிரதமராக இருந்தபோது வர்த்தக வளர்ச்சி ஆணையத்தின் சரக்கு மானிய நிதியில் சுமார் 7 பில்லியன் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது கராச்சியில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள விசாரணை நிறுவனமான எஃப்ஐஏ நடத்திய விசாரணையில், கிலானி, முன்னாள் அமைச்சர் ஃபாஹிம் ஆகியோருக்கு ஊழலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
நீதிபதி முகமது அஜீமிடம் எஃப்ஐஏ அதிகாரிகள், கிலானி மற்றும் ஃபாஹிம் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன்பிறகு இருவருக்கும் நீதிமன்றத்தில் தோன்ற வேண்டும் என்பதற்கான அறிவிப்புகள் வழங்கப்பட்டது. எனினும், இருவரும் நீதிமன்றத்தில் தோன்றாததால் நீதிபதி அவர்களுக்கு கைது உத்தரவு பிறப்பித்தார்.