இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறைத் தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானை முற்றிலுமாக தவறு கூறுவது சரியானதல்ல என பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. இந்திய அரசும், அதன் ஊடகங்களும் பாகிஸ்தானை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது. பாகிஸ்தான் அரசு ஜயிஷ்–இ–முகமட் அமைப்பை ஆதரிப்பதாக இந்தியா ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, உலக வர்த்தக நிறுவனத்தின் சரத்துகளின்படி, 1996-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த ‘மிகவும் நெருக்கமான நாடுகள்‘ எனும் தகுதியை இந்தியா இரத்து செய்துள்ளது. இதன் மூலம், இனி பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியான எந்த சலுகைகளும் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.