Home நாடு இரண்டாவது முறையாக ஹாடி பிரதமரைச் சந்தித்தார்!

இரண்டாவது முறையாக ஹாடி பிரதமரைச் சந்தித்தார்!

658
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரண்டாவது முறையாக பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பிரதமர் மகாதீர் முகமட்டை சந்தித்துள்ளார். யாயாசான் அல்புகாரியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை, அவர் பிரதமரைச் சந்தித்ததாக மலேசியா கினி செய்தித் தளம் குறிப்பிட்டிருந்தது.

ஆயினும், இச்சந்திப்பிற்கான விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பிரதமரை கடுமையாக விமர்சிக்க கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஹாடியும் ஒருவர்.

#TamilSchoolmychoice

நாளை சனிக்கிழமை நடைபெற இருக்கும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு முன்பதாக இவ்விருவரும் சந்தித்துக் கொள்வது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.