Home உலகம் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார்! – இம்ரான் கான்

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார்! – இம்ரான் கான்

1143
0
SHARE
Ad

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இன்று செவ்வாய்க்கிழமை, முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த வியாழனன்று இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் 44– க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக குற்றம்சாட்டிய இந்தியா, தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பான ஆதாரம் இருப்பதாகவும் கூறியது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இன்று இது குறித்து பேசிய இம்ரான் கான், பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது இந்தியா செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் நிச்சயமாக பதிலடியைக் கொடுக்கும் என எச்சரித்தார்.

இராணுவ தீர்வைக் காட்டிலும், பேச்சுவார்த்தையே சரியான தீர்வாக அமையும் என இம்ரான் கான் தெரிவித்தார்.