Home கலை உலகம் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் கர்ணன் காலமானார்

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் கர்ணன் காலமானார்

1220
0
SHARE
Ad

சென்னை, டிச.13 – பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கர்ணன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79. இன்று (13-12-12) அன்று பிற்பகல் 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், வீரபாண்டிய கட்டபொம்மன், கற்பகம், கைகொடுத்த தெய்வம், சிம்லா ஸ்பெஷல், ரஜினியின் பொல்லாதவன் உள்ளிட்ட சுமார் 150 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கர்ணன். காலம் வெல்லும், எங்க பாட்டன் சொத்து, ஜம்பு உள்ளிட்ட 25 படங்களை இயக்கியும் இருக்கிறார்.

புகழ்பெற்ற நடிகைகளான கே.ஆர்.விஜயா, மாதவி ஆகிய இருவரையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவரும் கர்ணன்தான்.

#TamilSchoolmychoice

அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், பாமா, தாரா என்ற மகள்களும் இருக்கிறார்கள். பொதுமக்கள் பார்வைக்காக சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்ப்பட வரலாற்றில் கௌபாய் பாணியில் நிறைய படங்களை எடுத்தவர் கர்ணன்.