Home இந்தியா பஞ்சாப் பொற்கோவிலில் இரு தரப்பினரிடையே மோதல் – 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

பஞ்சாப் பொற்கோவிலில் இரு தரப்பினரிடையே மோதல் – 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

514
0
SHARE
Ad

Anniversary of the 1984 Operation Blue Star at the Golden Temple in Amritsarஅமிர்தசரஸ், ஜூன் 7 – சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்திய 30 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இடத்தில் திடீரென இரு பிரிவினரிடையே பயங்கர வன்முறை வெடித்தது. அந்த இடமே போர்களமாக மாறியது.

இரு பிரிவினர்களுக்குள் ஏற்பட்ட இந்த வன்முறையில் பலரும் கைகளில் ஈட்டி, கத்தி போன்றவற்றை எடுத்துக் கொண்டு எதிர் தரப்பினரை பயங்கரமாக தாக்கினர். இதில் பலர் இரத்தக் காயமடைந்தனர்.

Members of Sikh radical groups clash with Shiromani Gurudwara Prabhandak Committee (SGPC) supporters1984-ல் பஞ்சாப் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் 30 ஆவது ஆண்டு நாள் 6.6.2014 வெள்ளிக்கிழமை. இது குறித்த விவாதக் கூட்டம் பஞ்சாப் பொற்கோவிலில் நடந்தது.

#TamilSchoolmychoice

கூட்டத்தின்போது சிரோன்மணி அகாலிதள் மற்றும் சிரோண்மனி குருத்துவாரா பிரபந்த கமிட்டியினரும் பங்கேற்றனர். இதில் புளுஸ்டார் ஆப்ரேஷன் தொடர்பாக ஐ.நா., குழு விசாரணை வேண்டும் என்று ஒரு தரப்பினர் குரல் எழுப்பினர்.

ஆனால் சிலருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை தாக்க முற்பட்டனர். இதில் வன்முறை வெடித்து, சிலர் தங்கள் கையில் வைத்திருந்த நீள வாள் மற்றும் பல அடி நீளம் கொண்ட ஈட்டி போன்றவற்றால் பலரை ஓட ஓட விரட்டி தாக்கினர்.

Anniversary of the 1984 Operation Blue Star at the Golden Temple in Amritsarபொற்கோவிலுக்குள் வெறியுடன் ஆயுதங்களை கையில் ஏந்தி சீக்கியர்கள் மோதிக் கொண்ட சம்பவம் ஒரு போர்க்களம் போல காணப்பட்டது. இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த மோதல் நடைபெற்றபோது அங்கு போலீஸார் யாரும் இல்லாததால் மோதலை உடனே கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த மோதலின்போது பத்திரிகையாளர்கள் சிலரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

Members of Sikh radical groups clash with Shiromani Gurudwara Prabhandak Committee (SGPC) supportersதொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது. இந்நிலையில் கலவர தடுப்பு போலீஸார் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.