Home கலை உலகம் நிதி நெருக்கடியில் சுருதி ஹாசன்?

நிதி நெருக்கடியில் சுருதி ஹாசன்?

1148
0
SHARE
Ad

Beautiful Shruti Haasan Pictures @ Race Gurram Press Interviewசென்னை, ஜூன் 7 – நடிகை சுருதிஹாசன் நிதி நெருக்கடியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கியில் அவர் கொடுத்த காசோலையில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் சுருதிஹாசன் நடித்து வருகிறார். தற்போது ‘பூஜை’ என்ற தமிழ் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார். இரண்டு இந்தி படங்களும் கைவசம் உள்ளன.

இந்தியில் தொடர்ந்து நடித்ததால் ஒரு வருடத்துக்கு முன் மும்பை பந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அது ஆடம்பர குடியிருப்பு என்பதால் மாதவாடகையாக கனிசமான தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் சேமிப்பு கரைந்தது.

#TamilSchoolmychoice

அந்த வீட்டில் சுருதிஹாசன் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. அங்கு பாதுகாப்பு இல்லை என்றும் எனவே வீடு மாறும்படி நெருக்கமானவர்கள் வற்புறுத்தினர். இதையடுத்து மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி குடியேற தயாரானார்.

மும்பை அந்தேரி பகுதியில் இரண்டு படுக்கை அறையுடன் அவருக்கு பிடித்தமான வீடு அமைந்தது. அந்த வீட்டை விலை பேசி முடித்தார். ஆனால் அவர் கொடுத்த காசோலையில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது.

இதனால் அவர் நிதி நெருக்கடியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடு என்ன விலை என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் பல கோடி மதிப்பு இருக்கும் என்று மும்பை பட உலகினர் முணுமுணுக்கின்றனர்.