Home கலை உலகம் “உலகிலேயே மிகச் சிறந்த மனிதர் என் அப்பா கமல்ஹாசன் தான்”- சுருதிஹாசன் பெருமிதம்!

“உலகிலேயே மிகச் சிறந்த மனிதர் என் அப்பா கமல்ஹாசன் தான்”- சுருதிஹாசன் பெருமிதம்!

799
0
SHARE
Ad

kaml-haasan-shruti-071114ஐதராபாத் – ‘‘உலகிலேயே சிறந்த மனிதர் என் அப்பா கமல்ஹாசன்தான்” என்று நடிகை சுருதிஹாசன் கமல்ஹாசனைப் பற்றிப் பெருமையாகப் பேசியுள்ளார்.

தமிழ்.தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிப் படங்களிலும் முன்னணி நாயகியாக இருப்பவர் சுருதிஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசன் – நடிகை சரிகாவின் மூத்த மகளாவார்.

சரிகா, கமலை விவாகரத்து செய்து விட்டு மும்பையில் இருக்கிறார். சுருதிஹாசன் சில காலம் அம்மாவுடன் மும்பையில் இருந்தார். முன்னணி நாயகியாகிவிட்ட பிறகு தனியாகத் தங்கியிருக்கிறார். எப்போதாவது அம்மா, அப்பாவைப் போய்ப் பார்த்து மகிழ்வதுண்டு.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் அப்பா கமலைப் பற்றி மிகவும் பெருமையாகக் கூறியுள்ளார்.

“உலகிலேயே சிறந்த மனிதர் என் அப்பாதான். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.

என் அப்பா என்னையும் என் தங்கையையும் சிறு வயதில் இருந்தே சுதந்திரமாகச் செயல்பட விட்டார். நாங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது சிந்தனையாக இருந்தது. அப்படி அவர் வளர்த்ததால் தான் என்னால் இப்போது எது சரி? எது தப்பு? என்று புரிந்துகொள்ள முடிகிறது.

எனது அப்பா கமல் மிகவும் நேர்மையானவர். சிறு வயதில் என் அப்பாமீது எனக்கு அன்பு மட்டும்தான் இருந்தது; இப்போது அவர்மீது மரியாதையும் வருகிறது’’ என்று கூறியுள்ளார்.