Home Featured தொழில் நுட்பம் “கம்ப்யூட்டரில் தமிழில் எழுத வைத்த வாத்தியார்கள்!” – தமிழகத்தின் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா

“கம்ப்யூட்டரில் தமிழில் எழுத வைத்த வாத்தியார்கள்!” – தமிழகத்தின் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா

1101
0
SHARE
Ad

Muthunedumaranகோலாலம்பூர் – தமிழகத்தின் பிரபலமான கேலிச்சித்திர ஓவியர்களில் (கார்ட்டூனிஸ்ட்) ஒருவர் பாலா. அவர் நேற்று தனது பேஸ் புக் அகப்பக்கத்தில் வெளியிட்ட கட்டுரை இது:-

“இன்று இணையத்தில் ஓரளவுக்கு தமிழில் பல விசயங்களை எழுத முடிகிறது என்றால் அதற்கு nhm writer-ஐ உருவாக்கிய Nagarajan KSமற்றும் செல்லினம் app-ஐ உருவாக்கிய Muthu Nedumaran ஆகிய இருவருக்கும் முக்கிய பங்குண்டு.

பத்தாண்டுகளுக்கு முன்பு காகிதத்தில் மட்டுமே எழுதி கொண்டிருந்தேன் . கணினியில் தமிழில் எழுதுபவர்களை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.

#TamilSchoolmychoice

அது எப்படி கணினியில் நாம் நினைக்கும் உணர்வுகளை எழுத்தாக்க முடியும்.. என்ன இருந்தாலும் காகிதத்தில் எழுதுறது மாதிரி வருமா.. என்றெல்லாம் அபத்தமாக நினைத்திருந்தேன்.

பிற்பாடு 2008-ல் எனக்கென சொந்தமாக கணினி வாங்கியப்பின் நண்பர் யெஸ். பாலபாரதி தான் எனக்கு nhm writer-ஐ அறிமுகப்படுத்தி வைத்தார்.

அது முறைப்படி டைப்பிங் படிக்காத என் போன்றவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. சாதாரணமாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்புவது போல் (ammaa -அம்மா) எழுதலாம் என்ற வசதி எனக்கு மிகவும் பிடித்துப்போனது.

காகிதத்தில் எழுதுவதை விட இன்று கணினியில் எழுதுவது ரொம்ப வசதியாக இருக்கிறது. தவறுகளை திருத்திக்கொள்ளவும் எழுத்து நடையை மெருகேற்றிக் கொள்ளவும் முடிகிறது.

அதோடு எழுதியதை வேறு எந்த font-க்கும் மாற்றிக்கொள்ள முடியும் என்ற nhm converter வசதி ரொம்பவே பயன்பட்டது.

இன்றுவரை கணினியில் என்.எச்.எம். பயன்படுத்தி தான் எழுதுகிறேன்.

அதன்பிறகு செல்போனில் தமிழில் எழுதுவதற்கு Sellinam app அறிமுகமானது. இதையும் பாலபாரதி தான் அறிமுகப்படுத்தினார். இதுவும் நன்றாக இருந்தது. நாம் பாதி எழுதிக்கொண்டிருக்கும்போதே நாம் எழுத விரும்பிய வார்த்தையை காட்டுவது செல்லினத்தின் சிறப்பு. ஆனால் செல்போனில் வேகமாக எழுத முடிவதில்லை.

அதனால் போனில் எழுதுவதற்காக ப்ளூடூத் கீபோர்ட் வாங்கினேன். ஆனால் வாங்கிட்டு வந்தப்பிறகு தான் அதில் செல்லினம் இயங்காது என்று தெரிய வந்தது.

இப்படி ஒரு சிக்கலை மணி மணிவண்ணன் அவர்கள் மூலம் முத்துநெடுமாறன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுப்போனேன். உடனடியாக அவர் அதற்கேற்ப செல்லினத்தில் மாற்றம் செய்தார். இன்று செல்போனில்தனியாக கீபோர்ட் பயன்படுத்தி கணினியில் எழுதுவதுபோல் எழுத முடிகிறது.

விசயம் அதுவல்ல.. தன்னுடைய செயலியில் ஒரு சிக்கல் இருக்கிறது என அவரது கவனத்திற்கு கொண்டுப்போனதும் அதை சரி செய்ய அவர் எடுத்துக்கொண்ட அக்கறை முக்கியமானது.

இவர்களைப் போன்றவர்களாலே மொழி அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சியடைகிறது.

ஒரு மொழியின் வளர்ச்சி காலத்திற்கு ஏற்ப நவீன கருவிகளின் பயன்பாட்டிற்கு வர வேண்டும். அதோடு அது வருவாய்க்கான மொழியாகவும் மாற வேண்டும். வெறுமனே கல் தோன்றி.. என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் கல்லில் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

அந்த வகையில் தங்களது கண்டுபிடிப்பை தமிழ் சமூகத்திற்கு இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கும் நாகராஜனுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த பத்ரி, செல்லினம் முத்து நெடுமாறன் போன்றோருக்கு நன்றி

கட்டுரை: கார்டூனிஸ்ட் பாலா