Home கலை உலகம் இவர்தான் சுருதிஹாசன் காதலரா?

இவர்தான் சுருதிஹாசன் காதலரா?

1335
0
SHARE
Ad
shruti hassan-boyfriend
சுருதி ஹாசனுடன் – அவர் திருமணம் செய்யப் போவதாகக் கூறப்படும் மைக்கல் கார்சோல்

சென்னை – நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் குடிபுகப் போகிறார் என தமிழக ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்திருக்கின்றன.

ஏற்கனவே, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து சுருதி விலகி விட்டார். தற்போது தனது தந்தையின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘சபாஷ் நாயுடு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஏற்கனவே அவர் மைக்கல் கார்சோல் என்ற வெள்ளைக்காரருடன் நெருக்கமாகப் பழகி வருவதாகவும், அவர்தான் சுருதியின் காதலர் என்றும் தமிழக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, தனது தாயார் சரிகாவிடம் மைக்கலை சுருதி அறிமுகம் செய்து வைத்து விட்டாராம்.

இந்நிலையில், கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் திருமணத்திற்கு பட்டுப் புடவை சகிதம் வந்திருந்த சுருதியுடன் பட்டு வேட்டி சட்டையில் கலக்கலாக வந்திருந்த நபர்தான் மைக்கல் கார்சோல் என்றும் அவரைத்தான் அடுத்த ஆண்டு சுருதி திருமணம் செய்யப் போகிறார் என்றும் தமிழக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதே திருமணத்திற்கு வந்திருந்த கமல்ஹாசனிடமும் தனது காதலர் மைக்கலை சுருதி அறிமுகம் செய்து வைத்தார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.