Home நாடு சைட் இப்ராகிமுக்கு மிரட்டல் – ஜமால் யூனுஸ் கைது!

சைட் இப்ராகிமுக்கு மிரட்டல் – ஜமால் யூனுஸ் கைது!

828
0
SHARE
Ad

Dato Jamal Yunusகோலாலம்பூர் – சுங்கை பெசார் அம்னோ தலைவரும் சர்ச்சைக்குரிய விவகாரங்களை அடிக்கடி எழுப்பி வருபவருமான டத்தோ ஜமால் யூனுஸ் இன்று சனிக்கிழமை இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் சட்ட அமைச்சரும், ஜசெக உறுப்பினருமான டத்தோ சைட் இப்ராகிமைக் குறிவைத்து அவர் விடுத்து வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து ஜமால் கைது செய்யப்பட்டார்.

அம்னோ பொதுப் பேரவைக்குப் பின்னர் இன்று மாலையில் கைது செய்யப்பட்ட அவர் இரவு 9.25 மணி வாக்கில் கோலாலம்பூர் டாங் வாங்கி காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டார் என ஸ்டார் ஆங்கில இணைய செய்தித் தளம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

கைது செய்யப்பட்டவுடன் இது சைட் இப்ராகிம் சம்பந்தப்பட்ட விவகாரம் என ஜமால் தெரிவித்ததாகவும் அந்தப் பத்திரிக்கை செய்தி தெரிவித்தது,