Home நாடு சைட் இப்ராகிமுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார் வேதமூர்த்தி!

சைட் இப்ராகிமுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார் வேதமூர்த்தி!

926
0
SHARE
Ad

waytha - 450 x 225கோலாலம்பூர் – சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் விடுத்து வரும் மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கும் முன்னாள் சட்ட அமைச்சரும் ஜசெக உறுப்பினருமான டத்தோ சைட் இப்ராகிமுக்கு தனது ஆதரவுக் கரத்தை ஹிண்ட்ராப் நீட்டும் என அதன் தலைவர் வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

“ஒருவர் என்னதான் கருத்து தெரிவித்தாலும் அடிப்படை மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அவருக்கு சரிசமமான, நியாயமான உரிமைகள் வழங்க வேண்டும்” என நேற்று சனிக்கிழமை வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் வேதமூர்த்தி தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 25-ஆம் தேதி சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் 10-ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட சைட் இப்ராகிம், ஹிண்ட்ராப் இயக்கத்தை இந்தியர்கள் நம்பலாம் எனப் பரிந்துரைத்திருந்தார்.

#TamilSchoolmychoice

ஹிண்ட்ராப், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட பின்னணியில் சைட் இப்ராகிம் பாடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

Zaid-Ibrahim-Slider
சைட் இப்ராகிம்

“சைட் இப்ராகிம் டுவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கு எதிராக காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, காவல் துறையினர் சுதந்திரமாக தங்கள் கடமையை ஆற்ற எந்தத் தரப்பின் நெருக்குதலும் இன்றி அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றும் வேதமூர்த்தி கூறினார்.

கையில் ஒரு சுத்தியலுடன் அண்மையில் பேட்டி கொடுத்த ஜமால், சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக சைட் இப்ராகிம் விடுத்த கருத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், தானே சைட் இப்ராகிமின் தலையை சுத்தியலால் அடித்து நொறுக்கப் போவதாக ஜமால் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சைட் இப்ராகிமின் கொடும்பாவியையும் ஜமால் ஏற்கனவே கொளுத்தியிருக்கின்றார்.

இதற்கிடையில் ஜமால் நேற்றிரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.