Home நாடு “இந்தியர்கள் ஹிண்ட்ராப்பை நம்பலாம்” – பரிந்துரைக்கிறார் சைட் இப்ராகிம்

“இந்தியர்கள் ஹிண்ட்ராப்பை நம்பலாம்” – பரிந்துரைக்கிறார் சைட் இப்ராகிம்

1020
0
SHARE
Ad

Zaid-430x244கோலாலம்பூர் – ஹிண்ட்ராப், அதன் தலைவர் பொ.வேதமூர்த்தியின் தலைமையின் கீழ் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாகத் திகழ முடியும் என்றும் இந்தியர்கள் தங்களின் நம்பிக்கையை ஹிண்ட்ராப் மீது வைக்கலாம் என்றும் முன்னாள் சட்ட அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம் (படம்)கூறியுள்ளார்.

ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு சைட் இப்ராகிம் தனது முகநூல் பக்கத்தில் பாராட்டும் தெரிவித்திருக்கிறார். சிரம்பானில் கடந்த சனிக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நினைவு விழா ஹிண்ட்ராப்பை ஒரு வலுவான அரசியல் சக்தியாகவும் வேதமூர்த்தியை அதன் தலைவராகவும் அடையாளம் காட்டியுள்ளது என்றும் சைட் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

Waythamurthy 300 x 200அம்னோவின் முன்னாள் அமைச்சரான சைட் இப்ராகிம் தற்போது ஜசெகவில் இணைந்து, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட்டு வருகிறார்.

#TamilSchoolmychoice

“ஓர்  இனம் புறக்கணிக்கப்படுவதும், நியாயமற்ற முறையிலும் நடத்தப்படுவதும் மக்களில் பலருக்கு தெரிவதே இல்லை. இந்திய சமுதாயத்தினர் இந்தப் பிரச்சனைகளை அடிக்கடி சந்தித்து வந்திருக்கின்றனர். இந்தியர்கள் பலர் இன்னும் அடையாள அட்டை பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். நாடற்ற பிரஜைகளாக இருந்து வருகின்றனர். இந்தியர்களிடம் பேசிப் பார்த்தால் அவர்களின் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது புரியும். இந்தியர்களின் முக்கியப் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய தலைவர்கள் அவர்களுக்குத் தேவை. இந்தியர்களுக்கு நம்பிக்கை வைக்க ஒருவர் தேவை. அந்த நம்பிக்கையை அவர்கள் ஹிண்ட்ராப் மூலம் பெறலாம்” என்றும் சைட் இப்ராகிம் பிரி மலேசியா டுடே இணைய செய்தித் தளத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

“அன்று சனிக்கிழமை ஹிண்ட்ராப் நிகழ்ச்சி நடைபெற்றபோது கொட்டும் மழையிலும் நிறைய, சாதாரண இந்தியர்கள் திரளாக வருகை தந்தார்கள். அவர்கள் தங்களின் தலைவருக்கு ஆதரவை வழங்கியதையும் காண முடிந்தது” என்றும் சைட் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

நவம்பர் 25-ஆம் தேதி சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நினைவு விழாவில் உரையாற்றிய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் மஇகாவை முற்றாகத் துடைத்தொழிப்போம் என்று சூளுரைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது கருத்துகளுக்கு மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி மறுப்பு தெரிவித்து, குறை கூறுவதாக இருந்தால் இந்தியர்களின் பின்தங்கிய நிலைக்காக நீங்கள் துன் மகாதீரைத்தான் குறை கூற வேண்டும் என சாடியிருந்தார்.