Home உலகம் புதிய ஏவுகணையைப் பரிசோதனை செய்தது வடகொரியா!

புதிய ஏவுகணையைப் பரிசோதனை செய்தது வடகொரியா!

931
0
SHARE
Ad

North Korea Missileபியோங்யாங் – வடகொரியா புதிய ஏவுகணைப் பரிசோதனை ஒன்றை நடத்தியிருப்பதாக யோன்ஹாப்பில் உள்ள தென்கொரிய கூட்டுப்படைகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கின்றன.

“வடகொரியா அடையாளம் தெரியாத கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணை ஒன்றை, தெற்கு பியோகானைச் சேர்ந்த பியோங்சாங்கிலிருந்து கிழக்கு நோக்கி ஏவியிருக்கிறது” என யோன்ஹாப் கூட்டுப்படையின் தலைமையகம் தெரிவித்திருக்கிறது.

வடகொரியா இப்படி ஒரு சோதனையை மேற்கொள்ளப் போவதை தென்கொரியாவும், ஜப்பானும் இரண்டு நாட்களுக்கு முன்பே கண்டறிந்து தகவல் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice