Home நாடு இடைக்கால பிரதமராக துங்கு ரசாலியே பொருத்தமானவர்

இடைக்கால பிரதமராக துங்கு ரசாலியே பொருத்தமானவர்

663
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இடைக்கால பிரதமராக நாட்டை வழிநடத்த சிறந்த நபராக அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சாவை சைட் இப்ராகிம் இன்று முன்மொழிந்தார்.

அவசரகால முடிவு மற்றும் நாடாளுமன்றத்தை மீண்டும் திறப்பது குறித்து விவாதிக்க, அடுத்த இரண்டு நாட்களில் மாமன்னரைச் சந்திக்க பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில், இதனை முன்னாள் சட்ட அமைச்சருமான அவர் கூறினார்.

“இந்த நாட்டின் தலைவருக்கு இப்போது தேவைப்படும் மிக முக்கியமான பண்பு நம்பிக்கை, மற்றும் துங்கு ரசாலியிடம் இது உள்ளது, ” என்று சைட் எப்எம்டியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

“அம்னோவுக்குள் அவருக்கு ஆதரவு இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர் நீண்டகாலம் அரசியலில் உள்ளவர் மற்றும் இடைக்கால பிரதமராக பொருத்தமானவராக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ” என்று அவர் கூறினார்.