Home நாடு அன்வார் இப்ராகிம் இஸ்தானா நெகாராவை வந்தடைந்தார்

அன்வார் இப்ராகிம் இஸ்தானா நெகாராவை வந்தடைந்தார்

566
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இஸ்தானா நெகாராவிற்கு வருகை புரிந்தார்.

சந்திப்பில் விவாதிக்க எதிர்பார்க்கப்படும் பிரச்சனைகளில் கொவிட் -19 பாதிப்பு நிலைமை மற்றும் அவசரநிலை ஆகியவையும் அடங்கும் என்று அந்த வட்டாரங்கள் நேற்று தெரிவித்தது.

எதிர்க்கட்சித் தலைவர் காலையில் சுல்தான் அப்துல்லாவை சந்திப்பார் என்று நேற்று மலேசியாகினி தெரிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சனைகள் உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அன்வார் எடுத்துரைப்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.