கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் விதிகளை மீறியதற்காக, அவரது மகன் உட்பட, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று உறுதியளித்துள்ளார்.
அவரது மகன் டாபி (கடாபி இஸ்மாயில் சப்ரி) உட்பட பல பிரபல நீதிபதிகள் இடம்பெறும், ஆஸ்ட்ரோவின் பாடும் போட்டி நகழ்ச்சியில், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“தேசிய பாதுகாப்பு மன்றம் இதனை விசாரித்து வருகிறது. யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை. நடைமுறைகளை மீறும் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் யாராக இருந்தாலும் சரி. அந்த நபர் எனது மகன் என்றாலும் கூட,” என்று இஸ்மாயில் சப்ரி மலேசியாகினியிடம் இன்று காலை ஒரு குறுஞ்செய்தியில் தெரிவித்தார்.
ஆஸ்ட்ரோவின் ‘ஆல் டுகெதர் நவ் மலேசியா’ நிகழ்ச்சியில் சமீபத்தில் 50 நீதிபதிகள் முகக்கவசங்கள் அணியாமல் ஒரே இடத்தில் இருப்பது கண்டனத்தைப் பெற்றது.
விசாரணை முடிந்ததும் இந்நிகழ்ச்சி குறித்து அறியப்படும் என்று மலாய் நிகழ்ச்சிக்கான துணைத் தலைவர் ராகீம் அகமட் தெரிவித்தார்.
“ஆல் டுகெதர் நவ் மலேசியா- இன் பதிவு மார்ச் மாதத்தில் புத்ராஜெயாவில் செய்யப்பட்டது. பதிவு தொடங்குவதற்கு முன்பு பங்கேற்கும் அனைத்து நபர்களுக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.