Home One Line P1 தேர்தல் நடத்தப்பட வேண்டும்- தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் சரிசெய்துக் கொள்ளலாம்

தேர்தல் நடத்தப்பட வேண்டும்- தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் சரிசெய்துக் கொள்ளலாம்

631
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடப்பு அரசு பல சிக்கல்களைக் களைவதில் தோல்வியுற்றதால், முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் பொதுத் தேர்தலை நடத்தவும், அதனை ஆண்டின் நடுப்பகுதியில் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

மலேசியாவின் மிகப்பெரிய பிரச்சனை பொருளாதார வீழ்ச்சி அல்லது கொவிட் -19 அல்ல, மாறாக புத்ராஜெயாவில் பலவீனமான தலைமை என்று சைட் கூறினார்.

“மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த குழப்பத்திலிருந்து நம்மை வெளியேற்றுவதற்கு ஒரு திறமையான தலைவர்கள் இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் தோல்வியுற்றது என்று நான் நினைக்கிறேன், பலர் நினைக்கிறார்கள். ஒரே வழி தேர்தல்தான்.

#TamilSchoolmychoice

“மக்களால் ஆணை வழங்கப்பட்ட ஓர் அரசாங்கத்தால் மட்டுமே சிறந்த வேலையைச் செய்ய முடியும். இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு தலைவர்களையும் மாமன்னரையும் நான் கேட்டுக்கொள்கிறேன், ” என்று அவர் கூறினார்.

“நமக்கு ஒரு சிறிய அமைச்சரவை தேவை, ஆனால் எண்ணற்ற பிரச்சனைகளை திறம்பட கையாளக்கூடிய அமைச்சர்கள் இருக்க வேண்டும். தீர்ப்பதற்கு நமக்கு பல சிக்கல்கள் உள்ளன, ஆனால் ஒரு சிலரைத் தவிர, தற்போதைய அமைச்சர்கள் சரியாக சமாளிக்கவில்லை, ” என்று அவர் கூறினார்.

கொவிட் -19 சம்பவங்கள் பொதுத் தேர்தலுக்குப் பிறகு உயரக்கூடும் என்று அவர் ஒப்புக் கொண்டார். ஆனால், மலேசியாவின் பிரச்சனைகள் மோசமடைந்து வருகின்றன, மேலும் புதிய தேர்தலை இதற்கு சிறந்த வழி என்று அவர் கூறினார்.

“மற்ற நாடுகளில் அதிக கொவிட் -19 சம்பவங்கள் உள்ளன, ஆனால், தேர்தல்கள் நடக்கின்றன. சிறிய அதிகரிப்பு இருக்கலாம், ஆனால், தேர்தலுக்குப் பிறகு நீண்ட காலமாக, தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கையாளும் ஓர் அரசாங்கம் இருக்கும், ” என்று அவர் கூறினார்.