Home One Line P1 அம்னோ, தேமு இன்னும் ஏன் தோல்வியுற்ற அரசாங்கத்தில் இருக்கின்றன?

அம்னோ, தேமு இன்னும் ஏன் தோல்வியுற்ற அரசாங்கத்தில் இருக்கின்றன?

585
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ மற்றும் தேசிய முன்னணி உறுப்பினர்கள் இன்னும் தோல்வியுற்ற அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருப்பதன் காரணத்தைக் கேட்டுள்ளார்.

கடந்தாண்டு அக்டோபரில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு பிரதமர் மொகிதின் யாசின் முதலில் மாமன்னருக்கு அறிவுறுத்த முயன்றபோது, தேசிய கூட்டணி அரசாங்கத்தின் நோக்கங்கள் சரியாக இல்லை என்பதை அவர் உணரத் தொடங்கியதாகக் கூறினார்.

“அந்நேரத்தில் கொவிட் -19 நிலைமையை நிர்வகிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளிலும் நான் ஏமாற்றமடைந்தேன். உதாரணமாக, மாநில தேர்தல்களுக்குப் பிறகு சபாவிலிருந்து திரும்பியவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

“பின்னர் கொவிட் -19 தொற்றுக்கான ஒட்டுமொத்த தனிமைப்படுத்தும் காலம் ஆறு நாட்கள் என்பதை சுகாதார அமைச்சகம் அறிந்திருந்த போதிலும், சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை மூன்று நாட்களாக மாற்றியது.” என்று அவர் குறிப்பிட்டார்.

இதைக் கருத்தில் கொண்டு, தீபகற்பத்தில் புதிய கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை தினசரி இரட்டை இலக்கங்களில் மட்டுமே இருந்ததால், உடனடியாக மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களை தடை செய்யுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியதாக நஜிப் கூறினார், ஆனால் இந்த அழைப்பு கவனிக்கப்படாமல் போனது.

இது அக்டோபர் முதல் தீபகற்பத்தில் மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளைத் தாக்கி இன்று வரை தொடர்கிறது என்று அவர் கூறினார்.

கொவிட் -19 கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தால், பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி , வெளிநாட்டு முதலீடுகள் பெருகி இருக்கும் என்று அவர் கூறினார்.