Home இந்தியா தமிழ்நாட்டில் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு

873
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாட்டின் மீண்டும் வேகமாகப் பரவிவரும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, எதிர்வரும் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், பொது இடங்களில், பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறுவதாலும், சமீபகாலத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது என தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், மேலும் கூடுதலான செயல்பாடுகளுக்கும் 20.4.2021 அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த உத்தரவைத் தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் / பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, வாடகை வண்டி (டாக்சி) மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசாங்க இலாகாக்களுடன் ஆய்வு நடத்திய பின்னர் இந்த ஊரடங்கு முடிவை அறிவித்திருக்கிறார்.