Home கலை உலகம் சிம்பு நடிக்கும் ’இது நம்ம ஆளு’ படத்தில் ஸ்ருதி ஹாசன் பாடல்!

சிம்பு நடிக்கும் ’இது நம்ம ஆளு’ படத்தில் ஸ்ருதி ஹாசன் பாடல்!

771
0
SHARE
Ad

inaசென்னை, மே 12 – பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஜெய், ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘இது நம்ம ஆளு’. படத்திற்கு இசை சிம்புவின் தம்பி குறளரசன். இந்த படத்தை சிம்புவே தனது சொந்த தயாரிப்பில் எடுத்து வருகிறார்.

இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் தற்போது ஸ்ருதி ஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளார். இவருடன் சிம்புவின் தம்பியும் படத்தின் இசையமைப்பாளருமான குறளரசன் பாடுகிறார்.  இந்த பாடல் காதல் பாடலாம்.

ஸ்ருதி ஹாசன் பாடல்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உள்ளது. வித்யாசமான அவரது குரலுக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இவர் பாடும் பாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.