இப்படத்தில் சிம்புவின் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படம் இன்று திங்கட்கிழமை (ஜனவரி 20) முதல் கோவையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சுரேஷ் காமாச்சி இத்திரைப்படத்தினை தயாரிக்க உள்ளார்.
அரசியல் சார்ந்த படமாக இப்படம் அமையும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு சுவாரஸ்யமான சலசலப்பு என்னவென்றால், கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப் ‘மாநாடு‘ படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.