சென்னை : விஜய்யின் அடுத்த படமான, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் – கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தின் முன்னோட்டம் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியாகி கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. இன்றுவரையில் யூடியூப் தளத்தில் மட்டும் 46 மில்லியன் பார்வையாளர்களை கோட் முன்னோட்டம் ஈர்த்திருக்கிறது.
விஜய் புதிய கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில் கோட் வெளியாவதால் படம் வெற்றி பெறுமா என உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. படம் வெற்றி பெற்றால், விஜய்யின் செல்வாக்கு மேலும் அரசியலில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் கோட் படத்தில் இடம் பெறும் ‘மட்ட மட்ட’ என்ற புதிய பாடலின் காணொலி இன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. பாடல் காட்சிகள் மட்டும் இடம் பெறவில்லை. அந்தப் பாடலுக்கு திரிஷா குத்தாட்டம் போட்டிருப்பதாகவும் அதுவே படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று என்பதாலும், அந்தப் பாடலுக்கான காட்சிகளை இன்னும் இரகசியமாக வைத்திருக்கிறார்களாம்.
‘மட்ட, மட்ட’ பாடலின் காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: