Home உலகம் ஸ்டாலின், ஆப்பிள், கூகுள், மைக்ரோசோஃப்ட் நிறுவனங்களுக்கு வருகை!

ஸ்டாலின், ஆப்பிள், கூகுள், மைக்ரோசோஃப்ட் நிறுவனங்களுக்கு வருகை!

212
0
SHARE
Ad

சான்பிரான்சிஸ்கோ – அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள ஆப்பிள், கூகுள், மைக்ரோசோஃப்ட் நிறுவனங்களுக்கு வருகை மேற்கொண்டார். அங்கு முதலீட்டு வாய்ப்புகளையும் கூட்டு பங்காளித்துவ வணிக முயற்சிகள் குறித்தும் அவர் விவாதித்தார்.

இந்த அனைத்துலக நிறுவனங்களோடு ஒத்துழைத்து, அவர்களின் ஆற்றலைக் கொண்டு தமிழ் நாட்டை ஆசியாவின் முன்னணி பொருளாதார மேம்பாட்டுப் பிரதேசமாக முன்னிறுத்த ஆவன செய்வேன் என ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.