ஸ்டாலின் தனது துணைவியார் மற்றும் குழுவினருடன் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார். தமிழ் நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் ஸ்டாலினுடன் அமெரிக்கா வந்திருக்கிறார்.
இதன்மூலம், தமிழ்நாடு 1 டிரில்லியன் – அதாவது ஆயிரம் பில்லியன் டாலர் பொருளாதார மண்டலமாக மாறும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) திரளாக சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் வந்து ஸ்டாலினுக்கு வரவேற்பு நல்கினர்.
தொழில்களையும், முதலீடுகளையும் ஈர்க்க வந்துள்ளதாக ஸ்டாலின் கூறினாலும் அவர் மருத்துவ பரிசோதனைகளை அமெரிக்காவில் மேற்கொள்வார் என்ற தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மருத்துவ காரணங்களுக்காக ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசாங்கம் அனுமதித்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.