Home நாடு சரவணன் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி : “பொருளாதார சமூக மேம்பாடுகளை நாம் கட்டமைக்க வேண்டும்”

சரவணன் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி : “பொருளாதார சமூக மேம்பாடுகளை நாம் கட்டமைக்க வேண்டும்”

224
0
SHARE
Ad

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர்
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

இந்த ஆண்டு தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களின் கருப்பொருள் Malaysia Madani ; Jiwa Merdeka. மேன்மைமிகு மலேசியா; சுதந்திர உணர்வு.

அறிவுசார்ந்த, சமூகம் மற்றும் பொருளாதார அம்சங்களில் இருந்து தேசபக்தி உணர்வை விளக்குவதில் மக்களின் சுதந்திரத்தை வெளிப்படையாகக் கொண்டிருக்கும் கொள்கையே ‘ஜீவா மெர்டேக்கா’.

#TamilSchoolmychoice

இன்றைய நடப்புச் சூழலை உணர்ந்து நமது பொருளாதார சமூக மேம்பாடுகளை நாம் கட்டமைக்க வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே மாற்றத்தை எதிர் கொள்ள எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும்.

நினைத்ததை எல்லாம் செய்வதல்ல சுதந்திரம். சரியானவற்றை உரிய நேரத்தில் செய்வதே சுதந்திரம். நமது சுதந்திரம் பிறருக்கு இடையூறாக இருந்து விடக் கூடாது.

பல தியாகங்கள், இழப்புகளைத் தாண்டித்தான் சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் மிகப் பெரிய போராட்டங்கள் உண்டு, நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கப் பலரின் தியாகங்கள் உண்டு. அந்த வரலாற்றை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் மலேசியர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். நம் நாட்டின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த மலேசியர்களின் ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டும். அதே வேளையில் நமக்குள்ளும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையே பலம்.

சுதந்திர தின நல்வாழ்த்துகள்!