Home உலகம் ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்

ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்

387
0
SHARE
Ad
ஸ்டாலினை வரவேற்கும் தமிழ் நாடு தொழில்துறை அமைச்சர் ராஜா

சான் பிரான்சிஸ்கோ – தமிழ் நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துணைவியார் மற்றும் குழுவினருடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் வந்தடைந்தார். அவரை தமிழ் நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார்.

மேலும், அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களும் திரளாக விமான நிலையம் வந்து ஸ்டாலினுக்கு வரவேற்பு நல்கினர்.

தொழில்களையும், முதலீடுகளையும் ஈர்க்க வந்துள்ளதாக ஸ்டாலின் கூறினாலும் அவர் மருத்துவ பரிசோதனைகளை அமெரிக்காவில் மேற்கொள்வார் என்ற தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இந்திய வெளியுறவு அமைச்சின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மருத்துவ காரணங்களுக்காக ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசாங்கம் அனுமதித்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.