Home Video விஜய்யின் ‘கோட்’ – கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – முன்னோட்டம் வெளியீடு!

விஜய்யின் ‘கோட்’ – கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – முன்னோட்டம் வெளியீடு!

455
0
SHARE
Ad

சென்னை : ஆங்கிலத்தில் தமிழ்ப் படங்களுக்குப் பெயர் வைப்பது என்பது புதிதல்ல! வழக்கமான ஒன்றுதான். ஆனால் விஜய்யின் அடுத்த படமான, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் – கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தின் பெயர் இறுதி நேரத்தில் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.  ஆனால் பெயர் மாற்றம் இல்லாமலேயே எதிர்வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று ஆகஸ்ட் 17-ஆம் தேதி கோட் படத்தின் முன்னோட்டம் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

விஜய் கோட் படத்தில் இரட்டை வேடங்களில் தந்தை-மகனாக நடிக்கிறார். ஒரு விஜய் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கொண்டு ஓட்ட, பின் இருக்கையில் அமர்ந்து இன்னொரு விஜய் துப்பாக்கியால் சுடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஓர் உளவுத் துறை அதிகாரியாக விஜய் நடிக்கிறார் என்பதை படத்தின் முன்னோட்டக் காட்சிகள் காட்டுகின்றன.

#TamilSchoolmychoice

கோட் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: