Home One Line P2 சிம்பு-திரிஷா நடிப்பில் கௌதம் மேனனின் குறும்படம் “கார்த்திக் டயல் செய்த எண்”

சிம்பு-திரிஷா நடிப்பில் கௌதம் மேனனின் குறும்படம் “கார்த்திக் டயல் செய்த எண்”

1059
0
SHARE
Ad

சென்னை – நடிகர் சிம்புவும், திரிஷாவும் இணைந்து நடித்திருக்கும் குறும்படம் ஒன்றை கௌதம் மேனன் (படம்) இயக்கி யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார். நடப்பு கொவிட்-19 சூழ்நிலைகளுக்கேற்ப எடுக்கப்பட்டிருக்கிறது 12.23  நிமிடங்களுக்கு ஓடும் இந்தப் படம்.

படப்பிடிப்புகள் நடத்தப்பட முடியாது என்ற நிலையில் ஒரு முனையில் சிம்புவும், மறுமுனையில் திரிஷாவும் தங்களின் கைத்தொலைபேசி வழியாகப் பேசிக் கொள்வது போல் எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.

திரிஷா அமெரிக்காவில் இருந்து பேசுவது போலவும், சிம்பு சென்னையில் இருந்து பேசுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருவருக்கும் இடையிலான உரையாடல்களில் நடப்பு சூழல்களுக்கேற்ப திரைப்படப் படப்பிடிப்பு முடங்கியிருப்பது, கொவிட்-19 குறித்த அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

#TamilSchoolmychoice

சிம்பு-திரிஷா நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கௌதம் மேனன் இயக்கிய “விண்ணைத் தாண்டி வருவாயா” சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

சிம்பு கார்த்திக் கதாபாத்திரத்திலும், திரிஷா ஜெஸ்ஸி என்ற அவரது காதலியாகவும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

கௌதம் மேனனின் இந்த குறும்படம் யூடிப் தளத்தில் மே-21-ஆம் தேதி  வெளியிடப்பட்டு இரண்டு நாட்களிலேயே 5.5 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் இரண்டாவது பாகத்தை கௌதம் மேனன் எடுக்கப் போவதற்கு முன்னோட்டமாகத்தான் “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார் என ஆரூடங்கள் கூறப்படுகிறது.