Home உலகம் நேபாள நிலநடுக்கம்: சௌதாராவில் கட்டிடங்கள் சரிந்தன! சடலங்கள் மீட்பு!

நேபாள நிலநடுக்கம்: சௌதாராவில் கட்டிடங்கள் சரிந்தன! சடலங்கள் மீட்பு!

704
0
SHARE
Ad

காத்மாண்டு, மே 12 – நேபாளத்தில் மீண்டும் இன்று பிற்பகல் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே அமைந்துள்ள சௌதாரா நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

Collapsed_buildings_in_earthquake-hit_Chautara,_Nepal_(16693413433)_(2)

இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அந்நாட்டின் முக்கிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

சௌதாரா நகரில் மூன்று இடங்களில் மிகப் பெரிய அளவிலான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.