காத்மாண்டு, மே 12 – 8 ஆயிரம் பேரை பலி வாங்கிய நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து நேப்பாள மக்கள் படிபடியாக மீண்டு வருகின்றனர். தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குவிந்து கிடந்த இடிபாடுகளில் பெருமளவில் அகற்றப்பட்டுவிட்டனர்.
உடைந்து போன கலாச்சார சின்னங்களையும், புறதான கட்டிடங்களையும் சீரமைக்கும் பணிகளை நேப்பாள அரசு துவக்கி உள்ளது. இந்த பணிகளுக்காக ஐ.நா. அமைப்புகள் தாரளமான நிதி உதவி அளிக்க உள்ளன.
அதே போன்று நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகட்ட அரசு சுமார் 22 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி உள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக சேதமடைந்த வீடுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றனர்.
நிலநடுக்கத்தால் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக 30 லட்சம் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஐ.நா. நிவாரண குழு அறிவித்துள்ளது.