Home நாடு நைஜீரிய மாணவரிடம் 60,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

நைஜீரிய மாணவரிடம் 60,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

593
0
SHARE
Ad

handcuffஷா ஆலம், மே 12 – நைஜீரியர் ஒருவரிடம் இருந்து 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள மரிஜுவானா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறை துணைத் தலைவர் டத்தோ அப்துல் ரகீம் ஜாஃபர் கூறினார்.

30 வயதான அந்த நைஜீரியர் பெட்டாலிங் ஜெயாவில் தங்கியிருந்த அடுக்குமாடிக்
குடியிருப்பில் போலிசார் அதிரடி சோதனை நடத்தியபோது 21.6 கிலோ போதைப்
பொருளும், மைவி கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“போலிசார் போதைப் பொருளை கைப்பற்றுவதற்கும் முன்பே அவை 21 பெரிய உறைகளில் தலா ஒரு கிலோ வீதம் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் 3 கிராம் போதைப் பொருள் கொண்ட 81 சிறிய உறைகளையும் அந்த நைஜீரியர் வைத்திருந்தார்,” என்றார்
அப்துல் ரகீம்.

#TamilSchoolmychoice

பிடிபட்ட அந்த நைஜீரியர் 7 நாட்கள் தடுத்து வைக்கப்படுவார் என்று
குறிப்பிட்ட அவர், ஆபத்தான போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின்
பேரில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆடவருக்கு 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
அல்லது அதிகபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும் அவர்
கூறினார்.

“அந்த ஆடவர் மாணவருக்கான விசாவில் மலேசியா வந்துள்ளார். சுபாங்கில் உள்ள
ஒரு கல்லூரியில் படிக்கிறார். அவர் எப்போது கல்லூரியில் சேர்ந்தார்
என்றும் அவரது வாடிக்கையாளர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்,” என்று
அப்துல் ரகீம் மேலும் தெரிவித்தார்.