Home இந்தியா சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது!

சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது!

668
0
SHARE
Ad

Earthquake15காத்மாண்டு, மே 12 – கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேப்பாளத்தை மையமாகக் கொண்டு இன்றும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

சென்னையிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாம். இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்து வங்கதேசம் வரை உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

earth quake delhiஇதனிடையே சென்னை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இதனால் மக்கள் பீதியடைந்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

மேலும், இந்தியாவில் டெல்லி, பிகார், மேற்கு வங்கம், உத்தர்கண்ட், வட கிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாம். அதே போல இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாம்.

april-11-2012-global-earthquakesஇதே போல், உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். நேப்பாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 9 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.