டோனி விளையாடும் ஆட்டத்தை அவ்வப்போது நேரில் கண்டு உற்சாகப்படுவார். இதனால் அவரையே டோனியின் கதாபாத்திரத்திற்கு தோ்ந்தெடுத்துள்ளார் அந்த படத்தை இயக்கும் இயக்குநா் நீரஜ் பாண்டே.
டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவரது மனைவி சாக்க்ஷியின் கதாபாத்திரமும் இடம் பெறுகிறது. அந்த கதாபாத்திரத்தில் அலியா பட் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தில் மேலும் 26 பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனா். திரைப்படத்தின் முதல் காட்சிகள் அடங்கிய முன்னோட்டம் டோணியின் மனைவி சாக்க்ஷி மும்பையில் வெளியிட்டுள்ளார்.
அதி விரைவாக தயாராகி வரும் டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வரும் அக்டோபா் மாதம் வெளியாகலாம் என படக்குழுவினர்கள் தெரிவித்தனர்.