Home இந்தியா சென்னை இசைவிழாவில் மகள், மனைவியுடன் கலந்துகொண்ட டோனி! (படங்களுடன்)

சென்னை இசைவிழாவில் மகள், மனைவியுடன் கலந்துகொண்ட டோனி! (படங்களுடன்)

693
0
SHARE
Ad

bravo_song_001சென்னை, மே 7 – சென்னையில் ‘திவோ’ என்ற நிறுவனம் சார்பில் ‘சலோ சலோ‘ பாடல் வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, தனது மகள், மனைவியுடன் கலந்துகொண்டார்.

bravo_song_001,இந்நிகழ்ச்சியில், சென்னை அணி வீரர் பிராவோ ‘சலோ சலோ‘ பாடலை பாடியுள்ளார். இந்த விழாவில் கிறிஸ் கெய்ல், ஜடேஜா, சுமித், ஆசிஷ் நெஹ்ரா, மைக் ஹஸ்சி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

West Indies all-rounder Dwayne Bravo dancingஇந்த நிகழ்ச்சியில் பாடலுடன் நடனம் ஆடிய பிராவோ கூறுகையில்; “நான் உலா என்ற தமிழ் படத்தில் ஏற்கனவே நடித்து இருக்கிறேன். இந்தி நடிகர்களில் ஷாருக்கானையும், தீபிகா படுகோனையும் எனக்கு மிகவும் பிடிக்கும்”.

#TamilSchoolmychoice

bravo_song_002“மேலும் படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன். சென்னையில் எனக்கு பிடித்த உணவு பிரியாணி. இங்குள்ள தெருக்களில் நடந்து சென்று மாம்பழங்களை வாங்கி சென்று இருக்கிறேன்”.

bravo_song_003“இது எனது சொந்த ஊரான டிரினி டாட்டை சென்னை நகரம் நினைவுப்படுத்துகிறது. இரண்டு இடங்களிலுமே இசையை விரும்பும் சாதாரண மக்கள் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

bravo_song_005மேலும், “இந்திய இசையை நான் மிகவும் விரும்புகிறேன் என்றும், ரிங்கா…ரிங்கா.., லுங்கி டான்ஸ் போன்ற பாடல் எனக்கு பிடிக்கும் எனவும்” அவர் தெரிவித்துள்ளார்.