Home கலை உலகம் கிரிக்கெட் கேப்டன் டோனியை மகிழ்ச்சிப்படுத்திய ‘காக்காமுட்டை’ சிறுவர்கள்!

கிரிக்கெட் கேப்டன் டோனியை மகிழ்ச்சிப்படுத்திய ‘காக்காமுட்டை’ சிறுவர்கள்!

697
0
SHARE
Ad

Dhoni ,புதுடெல்லி, ஜூன் 8 – ‘காக்காமுட்டை’ படம் வியாபார ரீதியாகவும் வெற்றிகரமாக ஓடுவதில் படக்குழுவினருக்குப் பெரிய மகிழ்ச்சி. படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் ஆகிய இரண்டு சிறுவர்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துக்கொண்டிருக்கிறது.

இதனால் அவர்களுக்கும் நிறையச் சந்தோசம். அச்சிறுவர்களுக்கு கிரிக்கெட்வீரர் டோனியைப் பிடிக்கும் என்பதால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, டோனியோடு அவர்களைச் சந்திக்கவைக்கப் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மும்பையில் ஒரு விளம்பரப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த டோனியிடம் நேரம் வாங்கிக்கொடுத்திருக்கிறது “பாக்ஸ் ஸ்டார் நிறுவனம்”. சிறுவர்களிடம் எதுவும் சொல்லாமல் மும்பைக்கு அழைத்துச் சென்று டோனியின் முன்பு நிறுத்தியிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

சிறுவர்களுடன் இயக்குநர் மணிகண்டனும் சென்றிருந்தாராம். டோனியைப் பார்த்ததும் சிறுவர்களுக்குப் பெரிய சந்தோசம். டோனி, காக்காமுட்டை படத்தைப் பார்க்கவில்ல யென்றாலும் முன்னோட்டத்தை பார்த்திருக்கிறார்.

இவர்கள் போய் சில காட்சிகளை அவருக்குக் காட்டியிருக்கிறார்கள். அவற்றைப் பார்த்ததும் டோனி உற்சாகமாகிவிட்டாராம். குடிசைப்பகுதியிலிருந்து வந்திருக்கும் சிறுவர்கள் என்றதும், அவருக்குக் கூடுதல் ஆச்சரியம் என்று சொல்கிறார்கள்.

அவர்களை ஒன்றுக்குப் பலமுறை பாராட்டிப்பேசிய டோனி, சில வேலைகள் இருக்கின்றன, அவற்றை முடித்துவிட்டு படத்தைப் பார்த்துவிடுகிறேன் என்று சொன்னாராம்.

டோனியைப் பார்த்துச் சிறுவர்கள் சந்தோசப்பட்டதைவிட சிறுவர்களின் நடிப்பைப் பார்த்து டோனி சந்தோசப்பட்டதுதான் அதிகம் என்று சொல்லி மகிழ்கிறார்கள் படக்குழுவினர்.