Home உலகம் அமெரிக்காவிடம் இருந்து 14 போர் விமானங்களைப் பெற்றது பாகிஸ்தான்!

அமெரிக்காவிடம் இருந்து 14 போர் விமானங்களைப் பெற்றது பாகிஸ்தான்!

500
0
SHARE
Ad

us-fighter-jets-egypt.si_வாஷிங்டன், மே 6 – அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்கள், பயிற்சி விமானங்கள், கவச வாகனங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்திருந்தது.

அதன்படி, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 14 போர் விமானங்கள், 59 பயிற்சி விமானங்கள், 374 கவச வாகனங்கள் மற்றும் ஏராளமான போர் தளவாடங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது.

இவை அனைத்தும் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க படையினரால் பயன்படுத்தப்பட்டவை ஆகும். இந்த போர் தளவாடங்களை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்பதால், கடந்த காலத்தில் பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் அனுப்புவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.