Home கலை உலகம் சவுந்தர்யா ரஜினிகாந்திற்கு ஆண் குழந்தை பிறந்தது!

சவுந்தர்யா ரஜினிகாந்திற்கு ஆண் குழந்தை பிறந்தது!

821
0
SHARE
Ad

Soundarya-Rajinikanth-Engagement-Photos-01சென்னை, மே 7 – ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா அஸ்வினுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு குழந்தை பிறந்தது. சௌந்தர்யாவும் குழந்தையும் நலமாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் சினிமா தயாரிப்பு, இயக்குநர் என பல்வேறு வேலைகளில் ஓய்வில்லாமல் இருந்த சௌந்தர்யா, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வந்தார்.

10393764_874328892639192_4878691717734563588_nஇந்நிலையில், கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, சௌந்தர்யா திரையுலகில் எவ்வளவு வேண்டுமானாலும் சாதிக்கட்டும். ஆனால் அதற்கு முன் குழந்தைகள் பெற்றுக் கொள்ளட்டும் என்று மேடையிலேயே தெரிவித்தார் ரஜினி.

#TamilSchoolmychoice

Soundarya Rajinikanth Wedding Reception Gallery _5_இந்த நிலையில் கடந்த ஆண்டு தாய்மை அடைந்தார் சௌந்தர்யா. நேற்று இரவு அவருக்கு சுகப்பிரசவம் நடந்தது. இதன் மூலம் இரண்டு பெண் வாரிகளைக் கொண்ட ரஜினிக்கு மூன்றாவது பேரன் பிறந்துள்ளது. தகவலறிந்து ரஜினி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளாராம்.